Theme Check

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..?: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..?: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..?: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!
X

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி திறக்க உள்ளன. அதன்படி, ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோல, இடைப்பட்ட வகுப்புகளான 2, 3, 4, 7, 8, 10-ம் வகுப்பு ஆகியவற்றுக்கும் ஜூன் 13-ம் தேதியே மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் தாமதமாகவே தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

Next Story
Share it