Theme Check

ரூ.2,000 எப்போது கிடைக்கும்? – வெளியான புதிய தகவல்!!

ரூ.2,000 எப்போது கிடைக்கும்? – வெளியான புதிய தகவல்!!

ரூ.2,000 எப்போது கிடைக்கும்? – வெளியான புதிய தகவல்!!
X

மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டத்தின் கீழ் இணையும் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியானது 3 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தில் சேரும் விவசாயிகளின் வங்கி கணக்கில் தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் உள்ள 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.

farmers1

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 10ஆவது தவணைத் தொகை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செலுத்தப்பட்டது. தற்போது தங்கள் வங்கிக் கணக்கில் 11ஆவது தவணைத் தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

மே 14ஆம் தேதி வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், கடந்த ஆண்டு உதவித்தொகையை மத்திய அரசு மே 14ஆம் தேதியன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தியது.

money

ஆனால் இந்த ஆண்டு மே 14ஆம் தேதி தவணை வந்து சேரவில்லை. இந்நிலையில், வரும் மே 31 ஆம் தேதி 11வது தவணை வங்கி கணக்கில் செலுத்தப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் நிதி உதவிக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனாலும் இந்த தகவலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மே 31 ஆம் தேதி ரூ. 2000 கண்டிப்பாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

newstm.in

Next Story
Share it