எப்போது திருந்துவார்கள் ? - மாணவி பாலியல் புகாரில் பெரியார் பல்கலை. பதிவாளர் கைது !

எப்போது திருந்துவார்கள் ? - மாணவி பாலியல் புகாரில் பெரியார் பல்கலை. பதிவாளர் கைது !

எப்போது திருந்துவார்கள் ? - மாணவி பாலியல் புகாரில் பெரியார் பல்கலை. பதிவாளர் கைது !
X

மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதனால் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஏ வரலாறு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வு வினா தாளில், "இதில் எது தமிழ்நாட்டுக்குரிய தாழ்ந்த ஜாதி" என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான விருப்ப பதில்களாக மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு ஜாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

periyar

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக அரசு நடவடிக்கையும் எடுத்தது. இந்த சர்ச்சை வெடித்த சில நாட்களிலேயே பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரில் பதிவாளர் (பொறுப்பு ) கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகம் விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றசாட்டியதாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின்பேரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு )கோபி மீது, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து தெடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது பாலில் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


newstm.in

Next Story
Share it