இதில் யார் மேல் தவறு ? - வேலூர் சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம் !
இதில் யார் மேல் தவறு ? - வேலூர் சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம் !

வேலூரில் மத்திய சிறையில் இருந்து கொலை வழக்கு தண்டனை கைதி தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (எ) முத்துக்குமார். இவர் பணத்துக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2018ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு இவருக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து முத்துகுமார் 2019ஆம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை மத்திய சிறைக்கு எதிரே உள்ள சிறைதுறைக்கு சொந்தமான கட்டிடத்தை மீட்டிங் வளாகமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுத்தம் செய்யும் பணியில் சிறையில் உள்ள ஆயுள் தண்டறை கைதிகள் 21 பேரை சிறைக்காவலர்கள் ஈடுபடுத்தியுள்ளனர். மதிய உணவு இடைவேளையின் போது காவலர்கள் எண்ணிப்பார்க்கும் போது 21 பேரில் 20 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.
அப்போதுதான், நந்தா (எ) முத்துக்குமார் தப்பியோடியது தெரியவந்தது. அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் தேடியும் நந்தா கிடைக்காததால் அவரை சிறை காவலர்கள் அவரை தேடி வருகின்றனர். மேலும், தப்பியோடிய கைது நந்தா (எ) நந்தகுமாருடன் இருந்த சக கைதிகள் 20 பேரிடம் சிறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

