Theme Check

கோவையில் பாணி பூரி கடை நடத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி

கோவையில் பாணி பூரி கடை நடத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி

கோவையில் பாணி பூரி கடை நடத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி
X

பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இன்று பட்டம் பெறுபவர்களில் அதிகமானோர் பெண்கள்தான், அந்த அளவிற்கு உயர்கல்வி துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகம் இருந்தது. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிடன் மாடல், பெரியார் மண்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். இந்தியை கட்டாயமாக்கக்கூடாது, மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளனர். என்றார்.

மேலும், நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, விரும்புவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கிறதா? கோவையில் பாணி பூரி கடை நடத்துபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார்.

Next Story
Share it