Theme Check

உன்னோட பணம் யாருக்கு வேணும்..?: முன்னாள் முதல்வர் கொடுத்த ரூ.2 லட்சத்தை வீசி எறிந்த பெண்..!

உன்னோட பணம் யாருக்கு வேணும்..?: முன்னாள் முதல்வர் கொடுத்த ரூ.2 லட்சத்தை வீசி எறிந்த பெண்..!

உன்னோட பணம் யாருக்கு வேணும்..?: முன்னாள் முதல்வர் கொடுத்த ரூ.2 லட்சத்தை வீசி எறிந்த பெண்..!
X

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 6-ம் தேதி மாலை, பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதை வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் கண்டித்தனர்.

இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் கல் வீசி தாக்கிக் கொண்டனர். 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

பேருந்து நிலையத்தில் இருந்த பழக்கடைகள், காய் வண்டிகள் ஆகியவற்றை சேதப்படுத்தி தீ வைத்தனர். இதில், இரு மதத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். தீயணைப்பு படையினர் கடைகள், வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முதல்கட்டமாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஹனீப், ராஜே ஷாப், ரஃபீக், தவால் மாலிக் ஆகியோரிடம் நலம் விசாரித்தவர், அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கினார்.

அதை வாங்க மறுத்த பாதிக்கப்பட்டவரின் மனைவி ஒருவர் பணத்தை சித்தராமையாவிடமே திருப்பி கொடுக்க முயற்சித்தார். ஆனால், அவரை சித்தராமையா சமாதானம் செய்தார்.

பிறகு காரில் ஏறி புறப்பட்டார். சமாதானம் ஆகாத அந்தப் பெண், பாதுகாப்பு வீரர்களை பின்தொடர்ந்து சென்று 2 லட்சம் ரூபாயை காருக்குள் வீசினார்.

இதுகுறித்து பேசிய அந்த பெண், ‘எங்களுக்கு பணம் வேண்டாம்; நீதி தான் வேண்டும். சில விஷமிகள் அமைதியை கெடுக்கிறார்கள். அத்தகையவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும்.

எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. சித்தராமையாவிடமோ அல்லது வாக்குக் கேட்க வரும் வேறு யாரிடமோ நிவாரணம் கேட்டு தினமும் எங்களால் பிச்சை எடுக்க முடியாது’ என்றார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு சித்தராமையா கூறும்போது, “நான் ரூ.2 லட்சத்தை நிவாரணமாக கொடுக்கவில்லை. மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுத்தேன். தவறு செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

Next Story
Share it