அடுத்த ஜனாதிபதி யார்? - 99.18% சதவீத வாக்குகள் பதிவு !!
அடுத்த ஜனாதிபதி யார்? - 99.18% சதவீத வாக்குகள் பதிவு !!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி வரை வாக்களிக்க நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் நாசர் ஆகியோர் வாக்களித்தனர். அமைச்சர் நாசர் முழுகவச உடை அணிந்தவடி சென்று வாக்குபதிவு செய்தார்.
இந்த நிலையில், 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தனது வாக்கை பதிவு செய்தனர்.

இந்த தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப் படாது. வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்படும். இதன்படி எம்பிக்களுக்கு பச்சை நிறத்திலும் எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவைகளில் இன்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகளுக்கு சீல்வைக்கப்பட்டன. அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், பேரவைகளில் பதிவான வாக்குகள் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.
newstm.in

