Theme Check

கேரளாவுக்கு செல்ல ஹிந்தி எதற்கு..?: கேட்கிறார் நடிகர் சத்யராஜ்..!

கேரளாவுக்கு செல்ல ஹிந்தி எதற்கு..?: கேட்கிறார் நடிகர் சத்யராஜ்..!

கேரளாவுக்கு செல்ல ஹிந்தி எதற்கு..?: கேட்கிறார் நடிகர் சத்யராஜ்..!
X

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ என்ற புத்தக அறிமுக விழா நடைபெற்றது.

இதில் நீலகிரி எம்பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கௌதமன், எழுத்தாளர் பாமரன், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், நடிகர் சத்யராஜ் பேசியதாவது: “திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்துள்ளது. தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான தான். ஆனால், ஆங்கிலத்தை நாம் அரவணைக்காவிட்டால் ஹிந்தி உள்ளே நுழைந்து விடும்.

மேலும், நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதை கற்றுக் கொள்ளலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு போனால் யாரும் சொல்லவே தேவையில்லை, ஹிந்தி கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், கேரளாவுக்கு வேலைக்கு செல்வதற்கு எதற்காக ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்..? என அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story
Share it