ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் போராடுவது ஏன்? - இதுதான் காரணம் !!
ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் போராடுவது ஏன்? - இதுதான் காரணம் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 6 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் அதிரடியாக ஐரோப்பிய யூனியனில் இணையும் முடிவை எடுத்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் கையொப்பமிடும் படத்தை தனது ட்விட்டா் பக்கத்தில் அதிபா் ஸெலன்ஸ்கி வெளியிட்டாா். விண்ணப்பத்தில், உக்ரைன் பிரதமா், அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவரும் கையொப்பமிட்டுள்ளனா்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைப்பதன் மூலம் ராணுவ உதவி நிதி உதவி என பலவிதமான உதவிகளை உக்ரைனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இல்லாததால், அதில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவ தயக்கம் காட்டுகின்றன. அதேநேரத்தில் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைந்துவிட்டால், அந்த அமைப்பின் படி உக்ரைனுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்க முடியும்.
இதனால் தான் உக்ரைனும் அதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இணைந்துவிட்டால், ரஷ்யாவை எதிர்கொள்ள அனைத்துவித ஆயுதங்கள், ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள், டாங்கிகள், போர் விமானங்கள் என அனைத்தும் உக்ரைனுக்கும் கிடைக்கும். மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ராணுவ வீரர்களும் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிடுவர். இதனால் தான் உக்ரைன் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அப்படி ஒருவேளை உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைந்துவிட்டால், போர் வரும் நாட்களில் மிகத்தீவிரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
newstm.in