Theme Check

பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி ஏன் தற்கொலை செய்ய வேண்டும்... நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் காலில் விழுந்த பெற்றோர்.!!

பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி ஏன் தற்கொலை செய்ய வேண்டும்... நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் காலில் விழுந்த பெற்றோர்.!!

பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி ஏன் தற்கொலை செய்ய வேண்டும்... நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் காலில் விழுந்த பெற்றோர்.!!
X

திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஹேமமாலினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹேமமாலினி திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

ஹேமமாலினிக்கு நாகதோஷம் உள்ளதாக கூறி அவரை அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து கடந்த 14-ம் தேதியன்று ஹேமமாலினியின் உறவினர்கள் அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்து கோட்டையில் உள்ள முனுசாமி என்பவரிடம் பூஜை செய்வதற்காக அழைத்து சென்றனர்.

இரவு அங்கேயே தங்க வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து ஹேமமாலினி தனது உறவினர்களுடன் தங்கினார். அவருக்கு அன்று இரவு பூஜை செய்த நிலையில் மறுநாள் ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் பென்னலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இறந்த ஹேமமாலினியின் தந்தை ராமகிருஷ்ணன், தாயார் நிர்மலா மற்றும் உறவினர்கள் ஆகியோர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது காரில் வந்த மாவட்ட ஆட்சியரை பார்த்தவுடன், அவர்கள் ஓடிச்சென்று ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் காலில் விழுந்து புரண்டு கதறி அழுதனர். பின்னர் ஹேமமாலினி தாயார் நிர்மலா தன் மகளின் சாவுக்கு காரணமான ஆசிரம சாமியார் முனுசாமி அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கதறி அழுதார்.

இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சியர் அவர்களிடம் சமாதானம் கூறி இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
Share it