Theme Check

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏன்?: பள்ளிக்கல்வித் துறை புதிய விளக்கம் !

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏன்?: பள்ளிக்கல்வித் துறை புதிய விளக்கம் !

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏன்?: பள்ளிக்கல்வித் துறை புதிய விளக்கம் !
X

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதில் தாமதம் ஏன் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்படி 2019 வரை 44 லட்சம் மாணவர்களுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.

எனவே, இலவச மடிக்கணினிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவல் சூழலில் வீடுகளில் இருந்து கல்வி பயில்வதற்கு மடிக்கணினி பெரிதும் உதவும் எனவும் கூறுகின்றனர். இதனால் எப்போது மடிக்கணினி வழங்கப்படும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர் .

online

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது, அரசின் இலவச மடிக்கணினிகள் குறைந்த விலையில் தயாரித்து வழங்கப்படுபவை. ஆனால், கொரோனா பரவலால் உலக அளவில் மடிக்கணினிகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.

இதனால் கணினிதயாரிப்பு நிறுவனங்கள், அதிகவிலைக்கு ஒப்பந்தம் கோருவதால் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதிஇந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கின்றனர்.


newstm.in

Next Story
Share it