வினாத்தாளில் வில்லங்கமான கேள்வி.. அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்..!

வினாத்தாளில் வில்லங்கமான கேள்வி.. அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்..!

வினாத்தாளில் வில்லங்கமான கேள்வி.. அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்..!
X

உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் இப்போது ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹிந்தி பாட வினாத்தாளில் ‘பெட்’ (மரம்) என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல் என்ன..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதேபோல், பதேஹி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளில் ‘60’-க்கு எதிர்ச்சொல் என்ன..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பிரயாக்ராஜில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வினாத்தாளில் ‘செவ்வகம்’ என்பதை அடையாளம் காணும்படி கேள்வி கேட்கப்பட்டது. இப்படி, ஆங்கில வினாத்தாளில் கணிதம் சம்பந்தப்பட்ட கேள்வி இருப்பது சற்று வினோதமாக இருந்தது.

இப்படி, பதில் அளிக்க முடியாத வகையில் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயம் விவகாரமாக மாறி, தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வி பொது இயக்குநர் அனாமிகா சிங் கூறுகையில், “கொரோனா மற்றும் தேர்தல் இருந்தபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுத் தேர்வுகளை நடத்த முடிந்தது. கேள்விகள் தொடர்பான சிக்கல்களை ஆராய பள்ளிக்கல்வி செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

Tags:
Next Story
Share it