Theme Check

விதவை பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. 4 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

விதவை பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. 4 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

விதவை பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. 4 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!
X

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்த 30 வயது விதவை பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண் நாடகம் பார்த்து விட்டு வீட்டிற்கு செல்ல நடந்து வந்தார்.

அப்போது, வழியில் நின்றிருந்த பிரனய் இங்கலே (24), அமோல் இசாக் (23), சந்திப் காம்ளே (24), அஜய் காம்ளே (25) ஆகிய 4 பேர் விதவை பெண்ணை வழிமறித்தனர். பின்னர் மறைவான இடத்திற்கு கடத்தி சென்று அப்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட விதவை பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி எஸ்.ஜே காரத் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

விசாரணை நிறைவில், 4 பேர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த தனது தீர்ப்பில், கூட்டு பலாத்கார குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இளம் வயதை மட்டும் சூழ்நிலையாக கருத முடியாது.

குற்றத்தின் தீவிர தன்மைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்குவதை கோர்ட் உறுதி செய்ய வேண்டியது உள்ளது. எனவே, குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it