மனைவிக்கு சீட் மறுப்பு.. திமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி..!
மனைவிக்கு சீட் மறுப்பு.. திமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி..!

மனைவிக்கு திமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர், மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு வீட்டிற்கு சென்று தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் வீட்டு சிறையில் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் திமுக வார்டு செயலாளர் ஆனந்தநாயகி. இவரது கணவர் அந்தோணிராஜ், வார்டு 21-ல் ஆனந்தநாயகி போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், அந்த வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு வீட்டிற்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள பெட்ரோல் கேனுடன் ஆயத்தமான நிலையில், போலீசார் அவரை வீட்டிலேயே தடுத்து நிறுத்தி சிறை வைத்தனர்.
இதுகுறித்து அந்தோணிராஜ் கூறுகையில், “'ஏற்கனவே வெற்றி பெற்ற வார்டில் என மனைவிக்கு சீட் கேட்டு கிடைக்கவில்லை. இதனால் பெட்ரோல் கேனுடன் மாவட்ட செயலாளர் வீட்டிற்கு கிளம்ப தயாரானேன். திருத்தங்கல் போலீசார் என்னை வீட்டு சிறையில் வைத்தனர்” என்றார்.

