Theme Check

மனைவி நோட்டமிட்டு சொல்ல, கொள்ளை அடிக்கும் கணவன்!!

மனைவி நோட்டமிட்டு சொல்ல, கொள்ளை அடிக்கும் கணவன்!!

மனைவி நோட்டமிட்டு சொல்ல, கொள்ளை அடிக்கும் கணவன்!!
X

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் உள்ள பாபாஜ் என்பவரது வீட்டில் கடந்த 3ஆம் தேதி மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அவரை தாக்கி அங்கிருந்து தங்க செயின், மோதிரங்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதனையடுத்து பாபாஜ் கொளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவியில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் என அடையாளம் கண்டு, இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

chn theft

விசாரணையில் பாலாஜியின் மனைவி திவ்யா என்பவர் ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தகவலை தனது கணவரிடம் கூறியுள்ளார். அதன்படி பாலாஜி தனது கூட்டாளி கார்த்தியுடன் சேர்ந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it