Theme Check

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி… குழந்தையை கொன்ற தந்தை!!

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி… குழந்தையை கொன்ற தந்தை!!

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி… குழந்தையை கொன்ற தந்தை!!
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால், குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ (22) - அம்சநந்தினி (20) தம்பதிக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. மனோ சென்னை திருநின்றவூரில் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிய மனோவும் அவரது மனைவியும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

இரவு 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. குழந்தையை காணவில்லை என்று அம்சநந்தினி அழுத நிலையில் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடினர். பின்னர் குளியலறையில் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது.

new born

இதைத்தொடர்ந்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் குழந்தையை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தந்தை மனோ குழந்தையை கொன்றது தெரியவந்தது. இரவு குடிபோதையில் மனைவியுடன் கணவன் படுக்கச் சென்றதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பிறந்து 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை நீர்நிறைந்த பக்கெட்டியில் அழுக்கி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it