Theme Check

நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… மிருகமாக மாறிய கணவன்!!

நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… மிருகமாக மாறிய கணவன்!!

நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… மிருகமாக மாறிய கணவன்!!
X

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம் காவிபிபுரா கிராமத்தைச் சேர்ந்த கேப் டிரைவர் அசோக் - வனஜாக்ஷி (31) தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தம்பதிக்கு கடந்த சில காலமாகவே செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. வனஜாக்ஷி செல்போனுக்கு அடிமையாகி அதிகமாக அதை பயன்படுத்தவதாக கணவர் சண்டையிட்டு வந்துள்ளார்.

woman attack 1

இந்நிலையில் வனஜாக்ஷி யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசியதை அடுத்து கணவர் அசோக்கிற்கு மனைவியின் நடத்தை மீதும் சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர் மனைவியை அறைந்துள்ளார்.

மனைவி கோபத்தில் சமையல் அறைக்குச் சென்று உருட்டுக்கட்டையை எடுத்துவந்து கணவர் அசோக்கை அடிக்க முயன்றுள்ளார். சுதாரித்த அசோக், மனைவியின் பிடியில் இருந்து உருட்டுக் கட்டையை பிடுங்கி, இவர் பதிலுக்கு வேகமாக அடித்துள்ளார்.

murder

அதில் மயங்கி விழுந்த மனைவி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். வனஜாக்ஷியின் சகோதரர் அவரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது சகோதரியின் மரணம் தெரியவர காவல்துறையிடம் புகார் தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்தது. செல்போன் காரணமாக கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it