Theme Check

மனைவி வீட்டுக்கு வர மறுப்பு.. மாமியாரை கொன்ற மருமகன் !!

மனைவி வீட்டுக்கு வர மறுப்பு.. மாமியாரை கொன்ற மருமகன் !!

மனைவி வீட்டுக்கு வர மறுப்பு.. மாமியாரை கொன்ற மருமகன் !!
X

குடிபோதையில் மனைவி என நினைத்து மாமியாரை அடித்துக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரின் சஞ்சய் நகரில் பவ்யாஸ்ரீ (30), நாகராஜு (35) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நாகராஜு தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்தது.

இதனால் மனைவி கோபித்து கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த கணவர், இம்மாதம் 13ஆம் தேதி மாமியார் வீட்டுக்கு சென்றார்.
sdf
மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார். மாமியார் சவுபாக்கியா மருமகனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். ஆனால், இரவில் மனைவியை பார்க்க அவர் மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை என்பதால், மாமியார் கீரை விற்கும் கடைக்கு சென்றார். மாமியார் தலையில் சுத்தியலால் அடித்தார். படுகாயம் அடைந்த மாமியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார் மருமகன் நாகராஜுவை கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மாமியாரை கொல்லும் எண்ணம் இல்லை; மனைவியை கொல்லவே திட்டம் போட்டேன். ஆனால், போதையில் யார் என்பது தெரியவில்லை. மனைவி என நினைத்து மாமியாரை சுத்தியலால் அடித்து விட்டேன், அவர் வாக்குமூலம் அளித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it