Theme Check

இயக்குநர் வெற்றிமாறனின் படக்குழு மீது வனவிலங்குகள் தாக்குதல்!?

இயக்குநர் வெற்றிமாறனின் படக்குழு மீது வனவிலங்குகள் தாக்குதல்!?

இயக்குநர் வெற்றிமாறனின் படக்குழு மீது வனவிலங்குகள் தாக்குதல்!?
X

வனவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொண்டதை அடுத்து இயக்குநர் வெற்றிமாறனின் படக்குழுவினர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இயக்குனர் வெற்றி மாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விடுதலை படத்தின் முக்கிய காட்சிகள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. சூரி, இந்த படத்தில் சீரியஸான காவலராக நடித்துள்ளார்.முதன்முறையாக விஜய் சேதுபதியும், வெற்றிமாறனும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

vetri

விடுதலை படத்தையொட்டி திண்டுக்கல் அருகே சிறுமலையில் கிராம செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி ஷூட்டிங் நிறைவு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பின்போது விஷ பாம்புகள், காட்டு மாடுகள், காட்டு நாய், அட்டைப்பூச்சிகளின் தாக்குதல்களை படக்குழுவினர் எதிர் கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.


விடுதலை படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி டூப் போடாமல் நடித்துக் கொடுத்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

முதன் முறையாக வெற்றி மாறன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை முடித்துக் கொண்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் முழுவீச்சில் இயக்கவுள்ளார்.

newstm.in

Next Story
Share it