Theme Check

கள்ளக்குறிச்சி போன்று தென்மாவட்டங்களிலும் வெடிக்கும்.. இளைஞர் கைது !

கள்ளக்குறிச்சி போன்று தென்மாவட்டங்களிலும் வெடிக்கும்.. இளைஞர் கைது !

கள்ளக்குறிச்சி போன்று தென்மாவட்டங்களிலும் வெடிக்கும்.. இளைஞர் கைது !
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை வாங்க மறுத்த பெற்றோர் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

நான்காவது நாளாக நடந்த போராட்டத்தில் வன்முறை உண்டானது. இதனால் இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வீடியோ மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

klk

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகேயுள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் கண்ணா (27) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக அங்கு கலவரம் நடந்தது போலவே தென்மாவட்டங்களிலும், அரசு சொத்துகளை மக்கள் சேதப்படுத்த வேண்டும் என்ற வகையிலும் சாதி வன்முறைகளை தூண்டும் வகையில் வாட்ஸ்ஆப் மூலமாக ஆடியோ வெளியிட்டார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சாதிய பிரச்சனையை உருவாக்கும் வகையிலும் ஆடியோ வெளியிட்டார்.

klk

இந்நிலையில், சண்முகசுந்தரத்தை சின்ன கோவிலாங்குளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுபோல பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் வகையில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it