Theme Check

மீண்டும் ஊரடங்கா..? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்..

மீண்டும் ஊரடங்கா..? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்..

மீண்டும் ஊரடங்கா..? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்..
X

தமிழகத்தில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் கூட்டு பரவலைத் தொடர்ந்து, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும் கொரோனா வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு தேவை, மாறாக கண்காணிக்காவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

Corona

மேலும், தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை 93.24 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும் 82.55 சதவீதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களை கண்காணித்து மறுபடியும் அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story
Share it