Theme Check

மே 1க்கு பிறகு தமிழகத்தில் மதுபானம் கிடைக்குமா?

மே 1க்கு பிறகு தமிழகத்தில் மதுபானம் கிடைக்குமா?

மே 1க்கு பிறகு தமிழகத்தில் மதுபானம் கிடைக்குமா?
X

பாமக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 20ஆம் பொது நிழல் நிதி அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

அதில், தமிழகத்தில் ஏழை குடும்பங்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கப்பட வேண்டும், பள்ளி மாணவர்கள் பயணிக்க தனி இலவசப் பேருந்து இயக்கப்பட வேண்டும், தமிழகம் 60 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் பாமகவின் நிழல் நிதி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

S_Ramadoss

தமிழ்நாட்டில் IIT-க்கு நிகராக ஐந்து இடங்களில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்கள் நிழல் நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மே 1 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை பாமக நடத்தும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் வெளியிடப்படும் அனைத்து திரைப்படங்களின் பெயர்கள் தமிழில்தான் இருக்க வேண்டும் என்றார்.

tnpsc

டிஎன்பிஎஸ்சி நடத்தும் நேர்முக தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் பதநீர் அதிக அளவில் இறக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விற்பனை செய்து அதன் மூலம் அதிக அளவில் வருமானம் ஈட்டலாம் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it