Theme Check

அரசு செய்யும் செயலில் கெடாதது செய்தியாக வரும்போது கெட்டுவிடுமா..?: கேட்கிறார் சீமான்..!

அரசு செய்யும் செயலில் கெடாதது செய்தியாக வரும்போது கெட்டுவிடுமா..?: கேட்கிறார் சீமான்..!

அரசு செய்யும் செயலில் கெடாதது செய்தியாக வரும்போது கெட்டுவிடுமா..?: கேட்கிறார் சீமான்..!
X

“பத்திரிகைகளில் எழுதுவது அரசின் நற்பெயரை கெடுப்பதாக கூறுகிறார்கள். அரசு செய்யும் செயலில் கெடாதது, செய்தியாக வரும்போது கெட்டு விடுமா..?” என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 41-வது நினைவு தினம் இன்று. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது; “பட்டப்பகலில் சாலைகளில் வைத்து வெட்டிக் கொலை செய்யும் வகையில்தான் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு உள்ளது.
Image
என்ன சட்டம் - ஒழுங்கு இருக்கிறது..? பேசுவதற்கெல்லாம் வழக்கு பதிவு செய்து, புனைந்து, சிறைபடுத்துவது எல்லாம் அதிகார அத்துமீறல்.

ஒருவர் ஒரு கருத்தை பதிவிடுகிறார் என்றால், அதற்கு மாற்று கருத்தைத்தான் பதிவிட வேண்டுமே தவிர, உடனடியாக சிறைபடுத்தி, பேசுவதற்கெல்லாம் குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது.

பேசினால், எழுதினால், குண்டர் சட்டம் என்றால், சட்டத்தை தவறாக பயன்படுத்துவது எப்படி சட்டம் - ஒழுங்காக இருக்க முடியும்..?

பத்திரிகைகளில் எழுதுவது அரசின் நற்பெயரை கெடுப்பதாக கூறுகிறார்கள். அரசு செய்யும் செயலில் கெடாதது, செய்தியாக வரும்போது கெட்டு விடுமா..? செய்தி வராமல் செயலை மாற்றிக் கொண்டால், செய்தி வராது.

அதிகாரத்தில் இருக்கும்போது, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அதிகாரம், ஆட்சியாளர்கள் என்று பேசுவதை எப்படி மக்கள் ஆட்சி என எடுத்துக் கொள்வது, எப்படி ஜனநாயகம் என்று எடுத்துக் கொள்வது..?

ஒரே ஒரு கருத்து, அதை யாரும் எதிர்க்கக் கூடாது என்று கூறுவது ஜனநாயகமா, கொடுங்கோன்மையா..?” என்று கேள்வி எழுப்பினார்.
Next Story
Share it