Theme Check

தியேட்டரில் திரைக்கு முன் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி! ஏன் தெரியுமா?

தியேட்டரில் திரைக்கு முன் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி! ஏன் தெரியுமா?

தியேட்டரில் திரைக்கு முன் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி! ஏன் தெரியுமா?
X

ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாக உள்ளதால் ஆந்திராவில் திரையரங்கில் திரைக்கு முன் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகிறது.

முன்னதாக ஜனவரி மாதம் ஆர்ஆர்ஆர் வெளியாக இருந்த நிலையில், கொரோனா 3ஆவது அலை பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் நோய் பரவல் குறைந்ததை அடுத்து ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இரண்டு பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் நடித்துள்ளதால் மிகப்பெரிய அளவில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

rrr

உலகம் முழுவதும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்நிலையில், ஸ்ரீகாகுளத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்கம் ஒன்றில், திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்கும் வகையில் கம்பி வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்துள்ளது.

திரையில் நாயகர்களைப் பார்த்த உற்சாகத்தில் அந்த மேடையில் ஏறி ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால், திரைக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it