Theme Check

4 ஆண்டுகளாக திருநங்கையுடன்.. இளைஞர் தற்கொலை.. திருநங்கை தலைமறைவு..!

4 ஆண்டுகளாக திருநங்கையுடன்.. இளைஞர் தற்கொலை.. திருநங்கை தலைமறைவு..!

4 ஆண்டுகளாக திருநங்கையுடன்.. இளைஞர் தற்கொலை.. திருநங்கை தலைமறைவு..!
X

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் திருநங்கை பாக்யா என்பவருடன் கடந்த நான்கு வருடங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், திருநங்கை பாக்யாவின் வீடு அருகில் உள்ள மரத்தில் இறந்த நிலையில் தினேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தினேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் திருநங்கை பாக்கியா தலைமறைவாக உள்ளதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நான்கு வருடங்களாக திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it