Theme Check

போலீசாரின் டீசல் செலவை கள்ளக்காதலன் செலுத்த உத்தரவு

போலீசாரின் டீசல் செலவை கள்ளக்காதலன் செலுத்த உத்தரவு

போலீசாரின் டீசல் செலவை கள்ளக்காதலன் செலுத்த உத்தரவு
X

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராகாபாய் பார்மர் (29) என்பவர், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெற்றோர் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் இருந்து வெளியேறி ஓடிப்போய்விட்டனர்.

பெண்ணின் பெற்றோர் பெண்ணை தேடி போலீசில் புகார் கொடுத்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தொலைந்து போன பெண்ணை கண்டுபிடிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

marriage

அதன்படி போலீசார் 7 மாதம் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இறுதியாக இருவரும் இருக்கும் இடம் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அங்கிருந்து பெண்ணை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பார்மர், இந்த பெண்ணை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி அழைத்து சென்றது தெரியவந்தது.

ஆனால் பார்மருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. அதை மறைத்து இந்த பெண்ணை காதலிப்பதாக நடித்து திருமணம் வரை சென்றுள்ளார். பின்னர் அந்த பெண் தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக சொன்னதையடுத்து நீதிமன்றம் அந்த பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் போலீசார் தரப்பில் இந்த பெண்ணை கண்டுபிடிக்க 7 மாத விசாரணைக்காக ரூ42,500 மற்றும் அந்த பெண்ணை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்ததற்கான செலவு ரூ75,000 செலவு செய்ததாக நீதிமன்றத்தில் கூறியது. இந்த வழக்கை பொறுத்தவரை இதற்காக ஆகும் செலவை மனுதாரரே ஏற்க வேண்டும்.
marriage
ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த செலவில் பாதியை மனுதாரரும் பாதியை இந்த பெண்ணை ஏமாற்றி சென்ற பாரிமரும் கொடுக்க வேண்டும் என் உத்தரவிட்டார். இவர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் இந்த பணத்தை கட்டி ரசீது பெற்றக்கொள்ள வேண்டும் எனவும், இந்த பணத்தை பதிவாளர் ராஜ்கோட் போலீசார் நல நிதியில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணை காதலித்து ஓடிப்போனவருக்கு நீதிமன்றம் ரூ55 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

newstm.in

Next Story
Share it