Theme Check

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பலி!!

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பலி!!

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பலி!!
X

மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டு அருகே ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரப்பிணி ரம்யாவுக்கு (29) அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா.பி.சிங் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Preg

அதனடிப்படையில், உயிரிழந்த கர்ப்பிணியான ரம்யா மருதம் என்ற மருந்தகத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.

மாத்திரை விற்ற மருதம் மருந்து கடையை ஆய்வு செய்ய விசாரணை குழுவினர் சென்றபோது கடை பூட்டியிருந்ததால் உரிமையாளரை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாகியும் கடையின் உரிமையாளர் வராததால் மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

medical

மறுநாள் சம்மந்தப்பட்ட மருந்தகத்தின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சீல் வைக்கப்பட்ட கடையில் இருந்து மருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டதால் உரிமையாளர் முத்துசாமியை விசாரிக்குமாறு மல்லசமுத்திரம் வட்டார அலுவலர் மருத்துவர் கிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it