சிஆர்பிஎஃப் பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்.. பகீர் வீடியோ !
சிஆர்பிஎஃப் பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்.. பகீர் வீடியோ !

சி.ஆர்.பி.எஃப். பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பர்தா அணிந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் சோபூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பதுங்கு குழி ஒன்று உள்ளது. இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டமும், பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் இருக்கும். இந்த நிலையில், சாலையில் பர்தா அணிந்த பெண் ஒருவர் மக்களுடன் சேர்ந்து நடந்துசென்றுள்ளார். அப்போது, பதுங்கு குழி அருகே சென்றதும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. வீடியோவில் மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள் . பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த வழியாக செல்கிறார். அந்தப் பெண் கையில் ஒரு பையை வைத்து இருக்கிறார். அதை அவர் பதுங்கு குழிக்குள் திடீரென வீசிவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார்.
பதுங்குக் குழி தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டதையும், பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து சி.ஆர்.பி.எஃப். பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
#WATCH Bomb hurled at CRPF bunker by a burqa-clad woman in Sopore yesterday#Jammu&Kashmir
— ANI (@ANI) March 30, 2022
(Video source: CRPF) pic.twitter.com/Pbqtpcu2HY
newstm.in

