11 ஆயிரத்து 765 பேருக்கு பணி.. நியமன ஆணை வழங்கினார் முதல்வர்..!
11 ஆயிரத்து 765 பேருக்கு பணி.. நியமன ஆணை வழங்கினார் முதல்வர்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 9 ஆயிரத்து 831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை காவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள 15 உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் 13 திட்ட உதவியாளர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் காலியாக உள்ள 47 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
வேளாண்மை - உழவர் நலத்துறையில் காலியாக உள்ள 17 தோட்டக்கலை உதவி இயக்குனர், 162 தோட்டக்கலை அலுவலர், 361 வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
இதன்படி, ஒட்டுமொத்தமாக 11 ஆயிரத்து 765 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

