Theme Check

வீட்டில் இருந்து பணி.. அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு..!

வீட்டில் இருந்து பணி.. அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு..!

வீட்டில் இருந்து பணி.. அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு..!
X

நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்ததை அடுத்து, மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சார்பு செயலர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு கடந்த 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘சார்பு செயலர் பதவிகளுக்கு கீழ் உள்ள மத்திய அரசு பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத பணியாளர்கள் நெறிமுறைகளை பின்பற்றி அலுவலகம் வந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறது.

அலுவலகம் வந்து பணியாற்றுபவர்கள் காலை 9 முதல் மாலை 5.30 மணி மற்றும் காலை 10 முதல் மாலை 6:30 மணி வரையிலான இருவேறு பணி நேரங்களை தவறாமல் பின்பற்றி, கூட்டம் சேர்வதை தவிர்க்க உதவ வேண்டும். சார்பு செயலர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனைவரும் தவறாமல் அலுவலகம் வந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் அலுவலகம் வந்து பணியாற்றுவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடர்கிறது. பயோமெட்ரிக் எனப்படும் விரல் ரேகை வாயிலான வருகை பதிவேடு முறைக்கு விதிக்கப்பட்ட தடையும் இம்மாதம் 15 வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it