தனது புகைப்படத்தால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை திடீர் தற்கொலை..!!
தனது புகைப்படத்தால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை திடீர் தற்கொலை..!!

சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் பிரபல தொலைக்காட்சி தொடர் "டாட்லர்ஸ் & டியரஸ்". இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப் (GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது 16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், ""என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. " என அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.