Theme Check

சத்துணவில் வழங்கிய முட்டையில் புழு.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

சத்துணவில் வழங்கிய முட்டையில் புழு.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

சத்துணவில் வழங்கிய முட்டையில் புழு.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!
X

தர்மபுரி அருகே, பள்ளி கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டையில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையில் புதிய அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், தரமான முட்டைகள் வழங்க அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
Share it