Theme Check

ஆணிப் படுக்கையில் யோகா.. சீர்காழி மாணவி அசத்தல்..!

ஆணிப் படுக்கையில் யோகா.. சீர்காழி மாணவி அசத்தல்..!

ஆணிப் படுக்கையில் யோகா.. சீர்காழி மாணவி அசத்தல்..!
X

புதுச்சோியில், ஆணி படுக்கையின் மேல் யோகாசனம் செய்து அசத்திய மாணவியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பாராட்டினர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த யோகா தின விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், சீர்காழி வேட்டங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவி சுபானு பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். குறிப்பாக, ஆணி படுக்கையின் மேல் இவர் செய்த யோகாசனங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அவருடைய யோகாசனங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பாராட்டினர்.

இதையடுத்து மாணவி சுபானு நிருபர்களிடம் கூறும்போது, “யோகாவை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும், யோகாசனமும், பரதமும் சேர்ந்த சிவனின் 108 தாண்டவத்தை பிரதமர் முன்பு ஆடி காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it