விமானத்தில் கத்தி கொண்டு செல்லலாம்.. அனுமதி வழங்கியது மத்திய அரசு..!
விமானத்தில் கத்தி கொண்டு செல்லலாம்.. அனுமதி வழங்கியது மத்திய அரசு..!

சீக்கியர்கள், கிர்பான் (குறுவாள்) எனப்படும் கத்தியை விமானத்தில் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.
இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உள்நாட்டிற்குள் பயணிக்கும் இந்திய விமானங்களில் மட்டும் சீக்கிய பயணிகள் கிர்பானை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
சீக்கியர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கிர்பானின் அளவு 22.86 செ.மீ. மற்றும் அதன் கூர்மையான பிளேடின் அளவு 15.24 செ.மீ.க்கு அதிகமாக இருக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கியர்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், விமானத்தில் சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க, விமானங்களில் கத்தியை எடுத்துச் செல்ல மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

