சூழ்ச்சியின் வீழ்ச்சியால் வீழ்ந்தாய்.. பழனியில் பரபரப்பு போஸ்டர்..!
சூழ்ச்சியின் வீழ்ச்சியால் வீழ்ந்தாய்.. பழனியில் பரபரப்பு போஸ்டர்..!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அமரபூண்டியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட மண்டையன் என்ற சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சங்கரை கொலை செய்தவர்கள் அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், சங்கரின் 3வது ஆண்டு நினைவு தினமான நேற்று (15-ம் தேதி) பழனி நகர் முழுவதும் நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில், ‘சூழ்ச்சியின் வீழ்ச்சியால் வீழ்ந்தாய் நீ.. உன்னை வீழ்த்தியவர்கள் யாரும் வாழ மாட்டார் இந்த மண்ணில்..’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
கொலையாளிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி போலீசார், போஸ்டர் ஒட்டிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘பழிக்கு பழியாக மற்றொரு கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

