#BREAKING:- இளம் நடிகை மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

#BREAKING:- இளம் நடிகை மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

#BREAKING:- இளம் நடிகை மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
X

‘கீதா’, ‘தோர்சனி’ போன்ற சீரியல்கள் மூலம் கன்னட சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சேத்னா ராஜ் (21).

தனது எடையைக் குறைக்க விரும்பிய சேத்னா ராஜ், தனது பெற்றோரிடம் கூட சொல்லாமல் தோழிகளுடன் சேர்ந்து பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஷெட்டி காஸ்மெட்டிக் சென்டரில் நேற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அப்போது, அவருடைய நுரையீரலில் திரவம் சேர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷெட்டி காஸ்மெட்டிக் சென்டர் மருத்துவர்கள் சேத்தனாவை அருகில் உள்ள காடே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Kannada actress Chetna Raj dies at 21, family accuses doctors – PressWire18
மேலும், அங்குள்ள மருத்துவர்களை கார்டியாக் அரெஸ்ட்டிற்கு சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் பெரும் முயற்சி செய்த போதும் சேத்னா ராஜ் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சேத்னா ராஜின் பெற்றோர், மருத்துவர்களின் அலட்சியமே தங்கள் மகள் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும், இது தொடர்பாக போலீசிலும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளம் நடிகை மரணமடைந்த சம்பவம் கன்னட சின்னத்திரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

சேத்னா ராஜ் மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it