Theme Check

சொகுசு படகில் சென்ற இளம் நடிகை மரணம்.. கொலை என தாய் பரபரப்பு புகார்..!

சொகுசு படகில் சென்ற இளம் நடிகை மரணம்.. கொலை என தாய் பரபரப்பு புகார்..!

சொகுசு படகில் சென்ற இளம் நடிகை மரணம்.. கொலை என தாய் பரபரப்பு புகார்..!
X

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் நிடா பட்சரவீரபாங். இவர், பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான ‘தி ஃபாலன் லீஃப்’ தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை நிடா பட்சரவீரபாங், பாங்காங் நொந்தம்புரி மாகாணத்தில் உள்ள சாவோ பிரயா ஆற்றில் தனது மேனேஜர் மற்றும் நண்பர்களுடன் சொகுசு படகில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, திடீரென நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சொகுசு படகில் சென்றபோது நடிகை லைஃப் ஜாக்கெட் போடாமல் இருந்ததே அவர் உயிரிழக்க காரணம் என்று அவருடன் பயணித்த நண்பர்களும் அவரது மேனேஜரும் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொகுசு படகில் சென்ற இளம் நடிகை ஆற்றில் விழுந்து மரணம்.. கொலையாக இருக்கும்  என தாய் பரபரப்பு புகார் | Thailand actress Nida Patcharaveerapong found  dead in river - Tamil ...
ஆனால், இது திட்டமிட்ட கொலை என்று நடிகையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது மகள் பல முறை ஏகப்பட்ட இடங்களுக்கு ரொம்பவே பத்திரமாக சென்று வந்திருக்கிறார்.

அவர் உயிருடன் இருக்கக் கூடாது என நினைத்த யாரோ ஒருவர் தான் அவரை வேண்டுமென்றே தள்ளி விட்டு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சொகுசு படகில் சென்ற நடிகை நிடா பட்சரவீரபாங் ஆற்றில் உயிரிழந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it