Theme Check

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இளம் வீராங்கனைகள் !!

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இளம் வீராங்கனைகள் !!

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இளம் வீராங்கனைகள் !!
X

தேசிய அளவிலான இந்திய அணிகளில் சமீபகாலமாக தமிழக வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கிரிக்கெட் என்றால் தினேஷ் கார்த்திக், அஷ்வின், வாஷிங்கடன் சுந்தர், நடராஜன் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அதேபோல் கால்பந்து, கபடி, ஹாக்கியிலும் தமிழக வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது திருவாரூரைச் சேர்ந்த வீராங்கனை நளினி விஷ்ணுஸ்ரீ இணைந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் எடமேலையூரை சேர்ந்தவர் அரசு - நளினி தம்பதியின் மகள் விஷ்ணுஸ்ரீ (17). சிறுவயது முதலே வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், எடமேலையூர் விளையாட்டு கழகத்தில் இணைந்து தொடர் பயிற்சியில் ஈடுபட்டார்.

woman vollyball

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் விளையாட்டு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு கல்வி பயின்று வருவதோடு வாலிபால் பயிற்சியும் பெற்று வருகிறார். இந்தநிலையில் 18 வயதுக்குட்பட்ட ஆசிய அளவிலான பெண்கள் வாலிபால் சாம்பியன் போட்டி தாய்லாந்தில் இன்று முதல் ஒருவாரம் நடக்கிறது.

இதில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட அணியில் திருவாரூரை சேர்ந்த விஷ்ணுஸ்ரீ இடம் பெற்றுள்ளார். இதனால் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் வாலிபால் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

woman vollyball

இதேபோல், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவாதிகா (17) என்ற வீராங்கனையும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த இளம் வீராங்கனைகள் நிச்சயம் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத்தந்து தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பார் என பலரும் வாழ்த்தி வருகின்றனறர்.

newstm.in

Next Story
Share it