Theme Check

பைக் ரேஸில் கைதான இளைஞருக்கு மருத்துவமனையில் பணி.. ஐகோர்ட் அதிரடி..!

பைக் ரேஸில் கைதான இளைஞருக்கு மருத்துவமனையில் பணி.. ஐகோர்ட் அதிரடி..!

பைக் ரேஸில் கைதான இளைஞருக்கு மருத்துவமனையில் பணி.. ஐகோர்ட் அதிரடி..!
X

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்தவர் பிரவீன் (21). இவர், கடந்த 20-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் என்பவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில்அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவீன் உள்பட நான்கு பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி பிரவீன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

பின்னர், மனுதாரர் பிரவீன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாகப் பணியாற்ற வேண்டும் எனவும், இது குறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்த நீதிபதி, பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story
Share it