நடுவானில் விமானத்தில் பெண் பயணி முன் சுய இன்பத்தில் இளைஞர்.. 3 மணி நேரத்தில் 4 முறை !!
நடுவானில் விமானத்தில் பெண் பயணி முன் சுய இன்பத்தில் இளைஞர்.. 3 மணி நேரத்தில் 4 முறை !!

அமெரிக்காவின் சியாட்டல் நகரிலிருந்து பீனிக்ஸ் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் சென்றுள்ளது. ஆன்டோனியோ ஷெரோட் மெகராட்டி என்ற நபரும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, ஆன்டோனியோ தனது பேண்டுகளை கழற்றி, அருகில் இருந்த சக பெண் பயணி முன் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வேறு வழியில்லாமல் கண்களை மூடிக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், மொத்தம் மூன்று மணி நேர பயணத்தில் இந்நபர் நான்கு முறை இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சக பெண் பயணி அந்நபரை புகைப்படம் எடுத்து கேபின் உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பயணியின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கப்பட்ட பின், மெக்கர்ட்டியை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆன்டோனியோ தனது செயலை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் சக பெண் பயணியிடம் அனுமதி கேட்டுதான் சுய இன்பத்தில் ஈடுபட்டேன். அந்த பெண் முதலில் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை என வாக்குமூலம் தெரிவித்துள்ளார். தான் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்றே இந்த செயலில் ஈடுபட்டதாகவும், இது அப்பெண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நினைத்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
எனினும் இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட மெக்கர்ட்டி சவுத்வெஸ்ட் ஏர்லைன்சில் இனி வாழ்நாள் முழுவதும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in