திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை கொன்ற இளைஞர்!!
திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை கொன்ற இளைஞர்!!

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே திருமணம் செய்து வைக்கவில்லை என்று பெற்றோரை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டியன்காடு கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி - வள்ளி தம்பதியினருக்கு ஒரு மகளும், பாலு, கோபிநாத் என்ற 2 மகன்களும் உள்ளனர். பாலு வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், கோபிநாத் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
வெளிநாடு சென்ற பாலு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து வீட்டிலேயே தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி பாலு தமது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
தகராறின் போது ஆத்திரமடைந்த பாலு தந்தை மற்றும் தாயை கழுத்தை அறுத்தும் ஆயுதத்தால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அப்பகுதி மக்கள் மண்டையூர் காவல் துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து பார்த்தனர். ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
அப்போது அவரது மகன் பாலு ஒன்றும் அறியாதது போல் அங்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்றுள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் பாலுவை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது தனது தாய் தந்தையரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மண்டையூர் காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

