Theme Check

தண்ணீர் தொட்டி மீது படுத்திருந்த இளைஞர் உயிரிழப்பு!!

தண்ணீர் தொட்டி மீது படுத்திருந்த இளைஞர் உயிரிழப்பு!!

தண்ணீர் தொட்டி மீது படுத்திருந்த இளைஞர் உயிரிழப்பு!!
X

மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூக்கிய இளைஞர் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்த விக்கி என்பவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார்.

இந்நிலையில், விக்கி வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்துத் தூங்கியுள்ளார். இதையடுத்து, நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் தண்ணீர் தொட்டியின் மேலிருந்து கீழே உருண்டு விழுந்தார்.

vicky

அதில் படுகாயம் அடைந்த விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காலையில் பெற்றோர் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூக்கிய இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it