Theme Check

வெட்டுக்காயங்களுடன் தப்பிசென்று சிகிச்சை பெற்ற இளைஞர் மருத்துவமனையில் கொலை.. கும்பல் வெறிச்செயல் !!

வெட்டுக்காயங்களுடன் தப்பிசென்று சிகிச்சை பெற்ற இளைஞர் மருத்துவமனையில் கொலை.. கும்பல் வெறிச்செயல் !!

வெட்டுக்காயங்களுடன் தப்பிசென்று சிகிச்சை பெற்ற இளைஞர் மருத்துவமனையில் கொலை.. கும்பல் வெறிச்செயல் !!
X

வெட்டுக்காயங்களுடன் தப்பி சிகிச்சை பெற்றபோது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புகுந்து வாலிபரை குத்திக்கொன்ற நகராட்சி ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூரைச் சேர்ந்த முகிலன் (22) என்ற இளைஞர் கம்பி கட்டும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் டிஎம்சி காலனியை சேர்ந்த பிரதாப் (24)என்பவருக்கும் கடந்த ஆண்டு திருவிழாவில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகிலன் குடிபோதையில் டிஎம்சி காலனியில் உள்ள கடைக்கு சிகரெட் வாங்கச்சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பிரதாப், அவரது உறவினர் கவாப் சுரேஷ் ஆகியோரை முகிலன் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து முகிலனை கத்தியால் வெட்டியுள்ளனர்.

attack

எனினும் காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து அவர் ஓடினார். பின்னர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள், முகிலனின் வெட்டு காயங்களுக்கு தையல் போட்டுக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே பிரதாப் தாக்கப்பட்டதை அறிந்த அவரது அண்ணனும், நகராட்சி துப்புரவு பணியாளருமான லெப்ட் சுரேஷ் (35), கவாப் சுரேஷ் மற்றும் உறவினர்களான லோகேஷ், தமிழரசன் ஆகியோருடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்தார். முகிலனிடம் ஏன் எனது தம்பியை தாக்கினாய் என கேட்டுவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே லெப்ட் சுரேஷ் உட்பட 4 பேரும் தப்பியோடிவிட்டனர்.

attack

தகலவறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் வந்து, முகிலனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்திய போலீசார், வெளியூர் தப்பிசெல்வதற்காக திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த லெப்ட் சுரேஷ், கவாப் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள லோகேஷ், தமிழரசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it