Theme Check

இளைஞர் வெட்டிக்கொலை.. சிறுமியின் தந்தை கைது !

இளைஞர் வெட்டிக்கொலை.. சிறுமியின் தந்தை கைது !

இளைஞர் வெட்டிக்கொலை.. சிறுமியின் தந்தை கைது !
X

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த மணிகண்டன்(20). இவருடைய அக்காள் உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு இன்று மெட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி நம்பி கோவிலில் வைக்கப்பட இருந்தது.

இதற்காக மணிகண்டன், தனது நண்பரான நெல்லையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன்(32) என்பவரை அழைத்துள்ளார். திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் சிறுமி மற்றும் அவரது தாய் அவர்களது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற கண்ணன், அவர்களை பார்த்து பைக்கில் இருந்து கீழே இறங்கினார். அப்போது ஏதே கூறியதாக தெரிகிறது.

police

இதனை கண்ட அப்பெண்ணின் கணவரான ராஜ்(40), தனது ஏன் மகளை கிண்டல் செய்கிறாய் என கண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அன்று நள்ளிரவு வீரராகவபுரம் குதிரை வண்டி தெருவில் நண்பர்களான கண்ணன், மணிகண்டன், விக்கி மற்றும் காசி ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தனது மகளை கிண்டல் செய்ததாக ராஜ், அதே பகுதியில் வசித்து வரும் தனது மைத்துனர் ராஜ் வடிவேலுடன் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அவர்களிடம் சிக்கிய கண்ணனை கழுத்து மற்றும் உடல் பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கண்ணன் உயிரிழந்தார்.

police

இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கோவில் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தை ராஜை கைது செய்தனர். ராஜ வடிவேலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it