தாயின் சேலை இறுகி 12 வயது சிறுவன் பலி!! விளையாட்டு வினையான கொடூரம்!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கால்நடைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஆண்ட்ரூ (12), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஆண்ட்ரூ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கால்நடைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஆண்ட்ரூ (12), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஆண்ட்ரூ தனது வீட்டில் தாயின் சேலையை ஊஞ்சல் போல கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் ஆண்ட்ரூவின் கழுத்து இறுகிக்கொண்டது. இதனால் வலியால் துடித்த சிறுவன் தலையை எடுக்க போராடியப்போதும் வேகமாக இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டது. பின்னர் மகனை உயிரிழந்த நிலையில் கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.
இந்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

