மோட்டர் பைக் மோதி 6 வயது பள்ளி மாணவன் பலி!!
மோட்டர் பைக் மோதி 6 வயது பள்ளி மாணவன் பலி!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த அம்மாண்டிவிளை பொட்டல்குழியை சேர்ந்தவர் சகாய வால்டர்(43). ஸ்டுடியோவில் போட்டோ கிராபராக பணிபுரிந்து வரும் இவருக்கு டஸ்கின் ஜோந்த்(6) என்ற மகன் உள்ளான். டஸ்கின் ஜோந்த், அப்பகுதியில் ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டு முன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வீட்டு முன் உள்ள சாலையை கடக்க முயற்சித்தான். அப்போது அம்மாண்டிவிளையில் இருந்து திருநயினார்க்குறிச்சி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் எதிர்ப்பாராமல் சிறுவன் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் டஸ்கின் ஜோந்த நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்தான். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் டஸ்கின் ஜோந்த இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தந்தை சகாய வால்டர் கொடுத்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் சிறுவன் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய கிரோஷியோ என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

