ஆற்றில் சென்றுக்கொண்டிருந்தப்போது திடீரென தீப்பிடித்து எரிந்த படகு- 40 பேர் உயிரிழப்பு
ஆற்றில் சென்றுக்கொண்டிருந்தப்போது திடீரென தீப்பிடித்து எரிந்த படகு- 40 பேர் உயிரிழப்பு

ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பற்றி எரிந்ததில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது.
தலைநகர் டாகாவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜகாகாதி பகுதியில் நடந்த தீ விபத்து உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எம்வி அபிஜான் 10 என பெயரிடப்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட படகு 100க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.
அதிகாலை 3 மணியளவில் நடு ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீரென தீப்பிடித்தது. தீ மள,மளவென படகு முழுவதும் பரவியது. அப்போது தீயில் இருந்து தப்பிக்க பலர் ஆற்றில் குதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 40 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் ஜகாகாதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜலோகாதி போலீசார் கூறுகையில், ‛நாங்கள் இதுவரை 40 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும். இரவு நேரம் என்பதால் பலர் தூங்கிக்கொண்டிருந்ததால் பலர் தீவிபத்தில் சிக்கினர். சிலர் படகில் இருந்து ஆற்றில் குதித்ததால் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர், என்றார்.
newstm.in