Theme Check

ஒரு பெட்டி மாம்பழம் ரூ.31,000! ஏலம் எடுக்க போட்டா போட்டி!!

ஒரு பெட்டி மாம்பழம் ரூ.31,000! ஏலம் எடுக்க போட்டா போட்டி!!

ஒரு பெட்டி மாம்பழம் ரூ.31,000! ஏலம் எடுக்க போட்டா போட்டி!!
X

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒரு பெட்டி மாம்பழம் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தைக்கு வரும் முதல் மாம்பழ பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்கும் என்பது புனே நகர வியாபாரிகளின் நம்பிக்கை. இந்நிலையில் சந்தைக்கு வந்த ரத்னகிரி அல்போன்சோ வகை மாம்பழத்தின் முதல் பெட்டி 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் அறிவிக்கப்பட்டது.

இதில் கடும் போட்டி நிலவியதை அடுத்து யுவராஜ் கச்சி என்பவர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

mango

இந்த பருவத்தின் முதல் மாம்பழங்கள் இவை. முதல் லோடு சந்தைக்கு வரும்போது, இப்படி ஏலம் விடப்பட்டு, வியாபாரிகள் அதை வாங்க முயல்கின்றனர். இந்த ஆண்டு ஏலம் எடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக யுவராஜ் கச்சி தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it