ஒரு பர்கர் விலை ரூ.4,50,000 !! வாங்க போட்டிபோடும் மக்கள்.. என்னென்ன சேர்க்கப்படுகிறது தெரியுமா?
ஒரு பர்கர் விலை ரூ.4,50,000 !! வாங்க போட்டிபோடும் மக்கள்.. என்னென்ன சேர்க்கப்படுகிறது தெரியுமா?

சமையல் நிபுணர் ஒருவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பீட்சா உள்ளிட்ட பல்வேறு துரித வகை உணவுகளில் முக்கியமான இடம் பெற்றுள்ளது பர்கர். இரண்டு பன்களுக்கு நடுவே சில பல உணவு பொருட்களை அடைத்து உண்ணும் பர்கர். இது பல வகையான சுவைகளிலும் கிடைக்கிறது. வெஜி, நான்வெஜி என்ற பிரிவுகளிலும் தனித்தனி சுவைகளிலும் உணவு உலகம் முழுவதும் கிடைக்கிறது.

இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் தற்போது பர்கர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். அவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக சாதனை படைத்துள்ளது. டெ டால்டன்ஸ் உணவகத்தில் இவர் தயாரிக்கும் இந்த பர்கரின் பெயர் தி கோல்டன் பாய்.
5 ஆயிரம் ஈரோ (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்) மதிப்புள்ள இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன், உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறதாம்.

இதனால் இந்த பர்கரின் விலை இப்படி உயர்ந்துள்ளது. எனினும் விலை உயர்ந்த பர்கரை அந்நாட்டு மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிச்செல்கின்றினர்.
newstm.in

