Theme Check

ஒரு தலை காதலால் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்..!!

ஒரு தலை காதலால் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்..!!

ஒரு தலை காதலால் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்..!!
X

புதுச்சேரியை சேர்ந்தவர் கீர்த்தனா (17). இவர் கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் (22). இவர் கீர்த்தனாவை காதலித்து வந்ததாக தெரிகிறது.

murder

இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்தது, தனியார் பேருந்தில் வந்த கீர்த்தனா சன்னியாசிக்குப்பம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த முகேஷ், மாணவியிடம் பேச முயன்றபோது, அவர் பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து சரிந்த மாணவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் திருபுவனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Thirubhuvanai

தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான முகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவியைக் கொலை செய்துவிட்டு தப்பிய முகேஷ் மீது தனியார் மதுக்கடையில் வெடிகுண்டு வீசியது, அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it